அதாவது அணு(atom) என்பது ப்ரொடான்(proton), நியுட்ரான்(neutron) மற்றும் எலக்ட்ரானால்(electron) ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ப்ரொடான்(proton) மற்றும் நியுட்ரொன்(neutron) என்பது, குவார்க்ஸ்(quarks) என்று சொல்லக்கூடிய மூன்று சின்ன துகள்களால் ஆனது. இந்த குவார்க்குகள் ஆறு வகையாக, அதன் தன்மைக்கு ஏற்றபடி பிரிக்கப்பட்டுள்ளன. பேர்யான்(baryon) என்பது ப்ரொடோனை போலவே குவார்க்குகள் என்று அழைக்கப்படும் மூன்று சிறிய துகள்களால் ஆனது. ஒரு "அப் (up)" குவார்க் மற்றும் இரண்டு "சார்ம்(charm)" குவார்க்குகள் கொண்ட இந்த துகள், முதன் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை "சார்ம் (charm)" குவார்க்குகளால் ஆன துகள் ஆகும். இது ஜெனீவாவுக்கு அருகே உள்ள ஐரோப்பிய இயற்பியல் ஆய்வகத்தின் CERN-இல் LHCb பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதை LHCb விஞ்ஞானிகள் ஜூலை 6 2017 அன்று இத்தாலிய நாட்டில் உள்ள வெனிஸில், உயர் எரிசக்தி இயற்பியல் பற்றிய ஐரோப்பிய பௌதீக சமூகம் மாநாட்டில் அறிவித்தனர். இது இரண்டு ப்ரொடொன்கள் ஒன்றொடு ஒன்று மோதிக்கொள்ளும்போது கண்டறியபட்டுள்ள துகள் ஆகும். பேர்யான் என்பது இயல்பாகவே பல குவார்க்குகளாள் ஆனவை. எடுத்துக்காட்டாக இரண்டு “அப்” குவார்க்குகள் மற்றும் ஒரு "சார்ம்(charm)" குவார்க் அல்லது ஒரு "ஸ்ட்ரேஜ்(strange)" குவார்க் மற்றும் இரண்டு "டௌன்(down) " குவார்கள் கொண்டு உருவாகும் துகள் ஆகும். இந்த "சார்ம்(charm)" குவார்க்கின் சிறப்பாம்சம், இதன் எடை மற்ற குவார்கள்களைவிட அதிகம். அதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய துகளை கொண்டு பல சோதனைகள் செய்து துகள்களுக்கு இடையேயான தொடர்புகளின் தத்துவங்களை ஆராய முடியும் என்று நம்பினர்.
![]() |
https://www.sciencenews.org/article/newfound-particle-relies-its-charms
|
இந்த துகளை (twin)இரட்டை "சார்ம்(charm)" Xi பேர்யான். (baryon) என்று அழைக்கப்பட்டாலும், இதன் உருவம் ஒன்றும் ஆச்சரியபட கூடியதாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காரணம், இயற்பியலாளர்கள் அதன் இருப்பை இயற்பியல் கோட்பாடுகள் மூலம் முன்னரே அறிந்து வைத்துள்ளனர். இந்த இரட்டை "சார்ம்(charm)" Xi பேரியானின் (baryon) நிறை, தொராயமாக ப்ரொடோனை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும். இதற்கு முன்னர் செய்த பரிசோதனையிலிருந்து கிடைத்த தகவல்கள் இந்த இரட்டை "சார்ம்” துகள் இருப்பை உறுதி செய்தாலும், முடிவுகள் சர்ச்சைக்குரியவையாகவே அமைந்தன. 2002-ஆம் ஆண்டு படாவியா Ill -வில் உள்ள ஃபெர்மிலேப்(fermilab) பரிசோதனைக்கூடத்தில், SELEX பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் கூறிய அறிக்கையில், இரட்டை "சார்ம்” குவார்க்குகள் மற்றும் "டௌன்(down) " குவார்க்குகள் (SN: 7/6/02, பக். 14) ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆனால் துகள்களின் பண்புகள் எதிர்பார்த்த கோட்பாட்டுகளுக்கு ஒற்றுப்பொகவில்லை என்றும், இன்னும் பிற சோதனை முடிவுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினர். ஆராய்ச்சியாளர்கள் புதியதாக கண்டுபிடிக்கபட்ட பேர்யான் துகள், SELEX பரிசோதனை முடிவுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறுகின்றனர். ஏனெனில் இரண்டு பேர்யான்களின் baryons நிறை கிட்டதட்ட ஒன்றாக இருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவை குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. இப்பொதைக்கு பேர்யான் கண்டரியப்பட்டாலும் இன்னும் முலுமையாக நிருபிக்க முடியாத சுழ்நிலையில்தான் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். கூடிய விரைவில் அதறாகன ஆதாரத்தை எதிர்பாக்கலாம்.
குறிப்பு:
இந்த மொழிபெயர்ப்பு, பொருள் மாறாமல் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (This article has been slightly modified without changing the meaning due to the language translation.)
மேற்கோள்கள்:
· https://www.sciencenews.org/article/newfound-particle-relies-its-charms
BY EMILY CONOVER july 7 2017.
· P. Spradlin. Spectroscopy with heavy flavours at LHCb. European Physical Society Conference on High Energy Physics, Venice, Italy, July 6, 2017.
மேலும் படிக்க:
D. Castelvecchi. Pas de deux for a three-scoop particle. Science News. Vol. 172, July 7, 2007, p. 13.
P. Weiss. Twice-charmed particles spotted? Science News. Vol. 162, July 6, 2002, p. 14.

No comments:
Post a Comment